ADDED : பிப் 09, 2010 09:26 AM

* தன்னிடம் உள்ள உணவு சிறிதாக இருந்தாலும், பிறருக்கு பகிர்ந்து கொடுத்து, தானும் உண்பதே அறங்களில் சிறந்த அறமாகும்.
* அறிவுரை சொல்லுதல் என்பது யாருக்கும் எளியது. ஆனால், தான் சொல்லியபடி வாழ்ந்து காட்டுதல் என்பது மிகவும் கடினமான செயலாகும்.
* ஒரு பொருட்டாக மதிக்கத்தகாதவரையும் மதிப்பு மிக்கவராக மாற்றும் பெருமை செல்வத்திற்கு மட்டுமே உண்டு. பொருள் இல்லாத ஏழையை யாரும் மதிக்காத உலகம், செல்வந்தரைக் கண்டால் புகழ்கிறது.
* நல்லவழியில் சம்பாதித்த செல்வம் அறச்செயல்களுக்கு பயன்படும். அதனால் உலகமே நல்லபயன்களைப் பெறும்.
* பயன் தரும் நல்ல நூல்களை படித்தால் இன்பம் பெருகும். அதுபோல, பண்புள்ள நல்ல மனிதர்களின் நட்பு மேலும் மேலும் இன்பத்தை உண்டாக்கும்.
* நட்பு கொள்வது வெறுமனே சிரித்து விளையாடுவதற்கு மட்டுமல்ல. ஒழுக்கநெறிகளில் இருந்து விட்டு விலகும்போது, கண்டித்து திருத்துவது தான் உண்மையான நட்பாகும்.
* அறிவில்லாதவர்களின் நட்பினை விட்டுவிலகிவிட வேண்டும். அதுவே, ஒருவன் வாழ்வில் பெறுகின்ற பெரும்பேறாகும்.
- திருவள்ளுவர்.